கண்ணே என் காதலியே
என்னை நியாபகம் இருக்கிறதா?
மீசை வளரும் பருவத்திலேயே உன் மேல் ஆசை வளர்த்தேனே -நியாபகம் இருக்கிறதா?
உன் சுட்டும் விழி பார்வையில் என்னை கட்டி இழுத்தாயே -நியாபகம் இருக்கிறதா?
உன் சிரிப்பொலியில் என் சிந்தையை தவரவிட்டனே -நியாபகம் இருக்கிறதா?
உன் கனநேர கண் தீண்டலுக்காக கால் கடுக்க தவம் புரிந்தேனே-நியாபகம் இருக்கிறதா?
உன் காலில் குத்திய முள்ளுக்காக கருவேலம் மரங்களை கருவருத்தேனே -நியாபகம் இருக்கிறதா?
கம்மங் காட்டில் கல்லூரி புத்தகங்களை காவல் வைத்தேனே-நியாபகம் இருக்கிறதா?
என் காதலை அங்கீகரிக்க
உன் ரெட்டை ரோஜா இதழ்களால் என் கன்னத்தில் முத்திரை பதித்தாதேயே -நியாபகம் இருக்கிறதா?
உன் ஒற்றை சடை பின்னலில் கொத்து மலராய் என் காதல் குடியேரியதே-நியாபகம் இருக்கிறதா?
என் பத்து விரல்களும் உன் கன்னத்தில் பரமபதம் விளையாடியது-நியாபகம் இருக்கிறதா?
கொட்டும் மழையால் உன் தேகம் சிவந்தபோது நான் துடித்து போனது-நியாபகம் இருக்கிறதா?
நித்தம் நித்தம் உன் முகம்பார்த்து விடிந்த என் பொழுதுகள் -நியாபகம் இருக்கிறதா?
மோகம் இல்லா என் புனிதக்காதல் -நியாபகம் இருக்கிறதா?
தாகம் தீர்த்த தண்ணீர் குளங்கள் -நியாபகம் இருக்கிறதா?
பாவம் பார்த்த பச்சை கிளிகள் -நியாபகம் இருக்கிறதா?
சுற்றும் உலகம் சற்று நின்றது - நியாபகம் இருக்கிறதா?
காற்று புக முடியாத இடைவெளியில் கூட காலன் புகுந்தாரே- நியாபகம் இருக்கிறதா?
என்னடா இவன் காலனுக்கு கூட மரியாதை தருகிறானே என்று பார்க்கிறாயா?
என்ன இருந்தாலும் அவர் உன் தகப்பன் அல்லவா!!!!!!
என் வாழ்வின் கடைசி நாள் ...............
உன் வாழ்வின் துவக்க நாள்................
என் வாய்க்கரிசி உனக்கு அர்ச்சதையாய் மாறியது
எனக்கு வாசித்த தப்பட்டைச்சத்தம் உன் கெட்டிமேளச்சத்தத்தில் ஊமை ஆனது
எனக்கோ நீர்மாலை உனக்கோ பூமாலை........
என் இறுதி ஊர்வலம் உன் மணப்பந்தலை கடந்த போது சற்றே உயிர்த்தெழுந்தேன்...
என் காதலுக்கு தீபந்தம் வைத்தவன் உன்னுடன் பூபந்து ஆடுவதை
கண்டவுடன் என் தேகம் மேலும் கனத்தது கண்ணே ...........
மேகம் கூட கண்ணீர் அஞ்சலி செலுத்தியது
என் காதல் தோல்விக்கு
ஊர்வலத்தில் ஒருவர் சொன்னார்
அவளை மறக்க முடியாமல் மாண்டு விட்டான் என்று ........
பாவம் அவருக்கு தெரியவில்லை
நீ மறந்ததால்தான் நான் மாய்ந்து விட்டேன் என்று..........
இன்னொரு ஜென்மம் எடுத்து வருவேன் ...........
அப்போதாவது புரிந்துகொள் என் காதலை ...............
No comments:
Post a Comment